ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 ஜூன் 2022 (19:31 IST)

நாங்கள்தான் உண்மையான அதிமுக : தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ் தரப்பு மனு

OPS
நாங்கள் தான் உண்மையான அதிமுக என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையரிடம் மனு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு உள்ளது என்பதும் ஈபிஎஸ் இந்த விஷயத்தில் தீவிரமாக இருப்பதாகவும் எனவே விரைவில் கூட இருக்கும் அதிமுக பொதுக்குழுவில் ஈபிஎஸ் ஒற்றை தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பிருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளராக அவர் தேர்வு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றம் சென்று உள்ள ஓபிஎஸ் தரப்பு அடுத்ததாக நாங்கள் தான் உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க  இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன