1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Nandhanam college principal arrested

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: நந்தனம் கல்லூரி முதல்வர் கைது..!

கல்லூரி
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நந்தனம் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கல்லூரியின் முதல்வர் கைது செய்யப்பட்ட தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
பள்ளி கல்லூரிகளில் அவ்வப்போது ஆசிரியர்கள் பேராசிரியர்கள் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து வருவது குறித்த செய்திகளும் அவர்கள் கைது செய்யப்பட்ட செய்திகளையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. 
 
இந்த புகார் குறித்து சைதாப்பேட்டை மகளிர் போலீசார் விசாரணை செய்த நிலையில் உடற்பயிற்சி கூடத்தில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அந்த கல்லூரியின் முதல்வர் அத்துமீறியது தெரியவந்தது. 
 
இதனை அடுத்து கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதன் பிறகு நீதிமன்றத்தின் உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
Edited by Mahendran 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.வி.பி-ஐ மூட உத்தரவு