வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (13:59 IST)

ஸ்மார்ட்போன் வாங்கினால் பீர் இலவசம்; கடையில் குவிந்த கூட்டம்! – சீல் வைத்த அதிகாரிகள்!

உத்தர பிரதேசத்தில் ஸ்மார்ட்போன் வாங்கினால் பீர் இலவசம் என அறிவித்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பலரும் தங்கள் நடத்தி வரும் தொழிலை லாபகரமானதாக்குவதற்காகவும், அதிக வாடிக்கையாளர்களை பிடிப்பதற்காகவும் உபயோகிக்கும் ஒரு உத்திதான் இலவச அறிவிப்புகள். இலவசங்கள் பெறுவதற்காகவே பொருட்கள் வாங்குவோர் பலர் உண்டு. வாடிக்கையாளர்களை ஈர்க்க ஒவ்வொரு தொழில் செய்பவர்களும் பல கவர்ச்சிகரமான இலவச அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். உத்தர பிரதேசத்திலும் தனது ஸ்மார்ட்போன் வியாபாரத்தை விரிவுப்படுத்த வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்மார்ட்போன் விற்பனையாளர் ஒருவர்.

தனது கடையில் ஸ்மார்ட்போன் வாங்கினால் இரண்டு டின் பீர் இலவசம் என அவர் அறிவித்துள்ளார். அறிவிப்பு வெளியானதுதான் தாமதம். பலரும் இலவச பீர் வாங்குவதற்காக செல்போன் கடையில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த போலீஸார் அங்கு விரைந்து மக்களை அப்புறப்படுத்தியதுடன் கடை உரிமையாளர் மௌரியா என்பவரையும் கைது செய்து கடைக்கு சீல் வைத்துள்ளனர். தொழிலை பெருக்க அறிவித்த இலவசமே கடைக்கு சீல் வைக்கும் நிலைக்கு தள்ளிய சம்பவம் பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K