திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (16:55 IST)

லாலு பிரசாத் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை

ரயில்வேதுறை ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் உறவினர் வீடுகளில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஜனதா தளம் கட்சி – ராஷ்டிரிய  ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இம்மா நிலத்தில், ரயில்துறையில் வேலை வாங்கித் தருவதாக  நிலம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று லாலு  இவ்வழக்கு தொடர்பாக டெல்லி,  பீகார் போன்ற இடங்களிலும், லாலுவின் உறவினர்கள் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

மேலும், பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஜனதா தள முன்னாள் எம்.எல்.ஏஅபு டோஜ்னாவின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் அம்மாநில அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.