1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Nallakannu will get home soon says OPS

நல்லக்கண்ணுவுக்கு மாற்று வீடு அளிக்கப்படும் – ஓ பி எஸ் உறுதி !

நல்லக்கண்ணு
அரசுக் குடியிருப்பில் வசித்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லக்கண்ணு அவர்களுக்கு விரைவில் மாற்று வீடு வழங்கப்படும் என துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லக்கண்ணு சென்னை தி நகரில் உள்ள சி.ஐ.டி. காலணியில் வசித்து வந்தார். இந்த வீடு அவருக்கு அரசால் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதற்காக அவர் மாதாமாதம் வாடகைக் கட்டி வந்தார். இந்நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பை இடித்து புதிதாக கட்டிடம் கட்ட இருப்பதாகவும் அதனால் அங்குள்ளவர்கள் உடனடியாகக் காலி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.

இதனை அடுத்து நல்லக்கண்ணு அந்த வீட்டை காலி செய்து விட்டு சென்னை கே கே நகருக்கு குடி பெயர்ந்தார். நல்லக்கண்ணுவுக்கு மாற்று வீடு கொடுக்காமல் அவரை இப்படிக் காலி செய்தது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தமிழக அரசு மீது விமர்சனங்கள் எழுந்தன.

இதனை அடுத்து தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் நல்லக்கண்ணுவுக்கு விரைவில் மாற்று வீடு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த குடியிருப்பில் வசித்து வந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன்களுக்கு புதிதாக வீடு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
நாளை மறுநாள் கனமழை – வடமாவட்டங்களுக்கு நற்செய்தி !