வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (07:15 IST)

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட வளாகத்தில் மர்ம நபர்: கம்யூனிஸ்ட் புகார்

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்து சென்று நகல் எடுத்ததாக மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு அங்கு போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவ்வப்போது அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கண்காணித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்து சென்று நகல் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த மர்ம நபர் எதற்காக ஆவணங்களை நகல் எடுத்தார்? காவலில் இருந்த போலீஸ்காரர்கள் எப்படி இதனை அனுமதித்தார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில் இதுகுறித்து மதுரை மக்களவை தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் மதுரை ஆட்சி தலைவர் நடராஜன் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து ஆட்சியர் விரைவில் விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது