1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Mysterious tire lying on the tracks Train collision damage

தண்டவாளத்தில் கிடந்த மர்ம டயர்! ரயில் மோதி பாதிப்பு! – திருச்சியில் பரபரப்பு!

Train
கன்னியாக்குமரி நோக்கி சென்றுக் கொண்டிருந்த விரைவு ரயில் திருச்சி அருகே தண்டவாளத்தில் கிடந்த டயரில் மோதி பாதிப்படைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி விரைவு ரயில் திருச்சி வாளாடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதி தண்டவாளத்தில் மர்ம நபர்கள் பெரிய லாரி டயர் ஒன்றை போட்டு வைத்துள்ளனர். வேகமாக வந்த ரயில் லாரி டயரில் மோதியதில் கொஞ்சம் குலுங்கியுள்ளது.

இதனால் ரயிலில் இணைக்கப்பட்டிருந்த 4 பெட்டிகளுக்கு மின் இணைப்பு நின்று போனது. உடனடியாக ரயில் அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த ரயில்வே ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்தனர். ரயிலில் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா என சரிபார்க்கப்பட்டு ரயில் தாமதமாக புறப்பட்டது.

இந்நிலையில் தண்டவாளத்தில் ஆபத்தான முறையில் இதுபோல டயரை வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னை நிலவரம்..!