திங்கள், 25 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 1 ஜூன் 2023 (19:00 IST)

கேரளாவில் பயணிகள் விரைவு ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு...போலீஸார் விசாரணை

kerala rail burn
கேரளா மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில்  நிறுத்தப்பட்டிருந்த கண்ணூர்- ஆலப்புழா பயணிகள் விரைவு ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கேரளா மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில்  நிறுத்தப்பட்டிருந்த கண்ணூர்- ஆலப்புழா பயணிகள் விரைவு ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில், முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் பொதுப்பெட்டி முழுவதும் சேதமடைந்தது.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். இதில், தீ பிற பெட்டிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது. பயணிகள் யாரும் இல்லாததால், பெரிய அசம்பாவிதம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர் தப்பியோடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. தேசிய புலனாய்வு படையினரும் விசாரித்து வருகின்றனர்.