தொடர்புடைய செய்திகள்
- கோயம்பேடு பேருந்து நிலையத்தில் புதிய சட்டசபை கட்டிடம்? 40 மாடியில் ஐடி அலுவலகம்?
- தீவுத்திடல் டூ கோயம்பேடு கட்சி அலுவலகம்... விஜயகாந்த் இறுதி ஊர்வலம் செல்லும் பாதை இதுதான்…!
- உடல் நல்லடக்கம் செய்யப்படும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை: போலீஸ் அறிவிப்பு
- விஜயகாந்த்திற்கு மணி மண்டபம் கட்ட வேண்டும்- அண்ணாமலை
- கேப்டன் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத் திடலில் வைக்கப்படுவதாக அறிவிப்பு
பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம்?..! ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு...!!
திமுகவின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலிஅறக்கட்டளை அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் என்று கூறி பாஜக மாநில நிர்வாகியான சீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகார் தொடர்பாக பதில் அளிக்கும்படி முரசொலி அறக்கட்டளைக்கு அந்த ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும்,தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்ஏஆர்எல் சுந்தரேசனும் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து முரசொலி அறக்கட்டளை நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
