ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2023 (20:25 IST)

கேப்டன் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத் திடலில் வைக்கப்படுவதாக அறிவிப்பு

vijayakanth death
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு சினிமா துறையினர் மத்திலும் தொண்டர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயகாந்த் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு,சினிமாத்துறையினர், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், கேப்டன் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் வைக்கப்படுகிறது.

தேமுதிக அலுலகத்தில் இருந்து நாளை காலை  மணிக்கு விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு மாற்றப்படும் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மதியம் 1 மணி வரை தீவுத்திடலில் விஜய்காந்த் உடல் வைக்கப்படும் எனவும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவித்துள்ளது.