1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MP Thirunavukarasu says DMK Congress alliance will continue

என்ன ஆனாலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும்! – எம்.பி திருநாவுக்கரசு!

Thirunavukarasu
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் கருத்து வேற்றுமை இருந்தாலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் என எம்.பி திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை சென்ற பேரறிவாளன் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை பல்வேறு கட்சிகள் கொண்டாடி வரும் நிலையில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் போராட்டம் நடத்தியது.

இந்நிலையில் திமுக பேரறிவாளன் விடுதலையை வரவேற்பதும், காங்கிரஸ் எதிர்ப்பதும் கட்சி கூட்டணியில் பிளவை ஏற்படுத்துமா என அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவி வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு “பேரறிவாளன் விவகாரத்தில் கருத்து வேறுபாடு இருந்தாலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும். திமுக – காங்கிரஸ் கூட்டணியை அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது” என தெரிவித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ZOMATO மூலம் டெலிவரி செய்த கெட்டுப்போன இறைச்சி!