1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Anna University students suffered with corona

அண்ணா பல்கலைகழகத்திலும் கொரோனா! – சென்னையில் அதிர்ச்சி!

Tamilnadu
சென்னை ஐஐடியில் முன்னதாக கொரோனா உறுதியான நிலையில் தற்போது அண்ணா பல்கலைகழகத்திலும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொரோனா பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக கொரோனா குறைந்து வந்த நிலையில் சென்னை ஐஐடியில் திடீரென பலருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் கொரோனா பாதிப்புகள் அங்கு குறைந்தது. தற்போது அண்ணா பல்கலைகழகத்தில் ஒரே நாளில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தலைநகர் கொலைநகராக மாறிவிட்டது: எடப்பாடி பழனிசாமி