வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 அக்டோபர் 2022 (13:57 IST)

தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சியால் மழை பெய்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு அதிகமான மழைப்பொழிவு வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படுகிறது. தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. முன்னதாகவே வடகிழக்கு பருவமழை தொடங்க இருந்த நிலையில் சிட்ரங்க் புயலால் பருவமழை தொடங்குவது தாமதமானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் படிப்படியாக மழை அளவு உயரும் என்றும் நவம்பர் 4ம் தேதி வரை மழை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Edited By Prasanth.K