வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2022 (10:43 IST)

பள்ளி வாகனங்களில் கேமரா கண்டிப்பா இருக்கணும்! – தமிழக அரசு உத்தரவு!

School bus
மோட்டார் வாகன சட்ட திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளி வாகனங்களில் கேமரா அமைப்பதை தமிழக அரசு கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவன் பள்ளி வளாகத்திலேயே நடந்து சென்றபோது ரிவர்ஸில் வந்த பள்ளி வேன் மோதி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மேலும் சில பள்ளி வாகன விபத்துகளும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. அனைத்து பள்ளி வாகனங்களிலும் கேமரா அமைப்பது, மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்வது உள்ளிட்டவற்றை முறைப்படுத்த கோரிக்கைகள் எழுந்தன.


தற்போது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் மற்றும் விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதில் பள்ளி வாகனங்களில் மாணவர்கள் விபத்திற்கு உள்ளாவதை தவிர்க்க வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறம் இரண்டிலும் கேமரா அமைப்பது மற்றும் பின்பகுதியில் சென்சார் அமைப்பது உள்ளிட்டவை கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Edited By Prasanth.K