1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2022 (09:17 IST)

தமிழகத்தில் மூக்கையும் நுழைப்பேன்; காலையும் பதிப்பேன்! – தமிழிசை சௌந்தர்ராஜன் அதிரடி!

தன்னை குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழகத்தில் தனது ஈடுபாடு குறித்து பேசியுள்ளார்.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன். தற்போது தெலுங்கானா மாநில ஆளுனராகவும், புதுச்சேரியின் கூடுதல் சிறப்பு ஆளுனராகவும் தமிழிசை சௌந்தர்ராஜன் பொறுப்பு வகித்து வருகிறார்.

ஆளுனராக தமிழிசை சௌந்தர்ராஜனின் செயல்பாடுகளை விளக்கும் புத்தகம் ஒன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு பேசினார்.


அப்போது அவர் “எனது பணியில் நான் யாருக்கும் இடையூறு செய்ததில்லை. ஆனால் ஆட்சியாளர்கள் சிலர் நான் இடையூறு செய்வதாக தவறாக கருதுகிறார்கள். குடியரசு தினத்தன்று தெலுங்கானா மாநிலத்தில் என்னை கொடியேற்ற விடவில்லை. ராஜ்பவன் வளாகத்தில்தான் நான் கொடி ஏற்றினேன்.

தெலுங்கானாவில், புதுச்சேரியில் என்னை ஒதுக்கிவிட்டார்களா? என கேட்கிறார்கள். என்னை செதுக்கியவர்களைவிட ஒதுக்கியவர்கள் அதிகம். இப்போது கூட தமிழ்நாட்டில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள் என கேட்கிறார்கள். தமிழகத்தில் மூக்கு, தலை, வாலையும் நுழைப்பேன். என் காலையும் பதிப்பேன். அதை யாரும் தடுக்க முடியாது. தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்ட நான் தயங்கமாட்டேன்” என கூறியுள்ளார்.

Edited By: Prasanth.K