1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2022 (18:23 IST)

சிவபெருமானே செஸ் விளையாடியுள்ளார். நமக்கே தெரியாத நம்மூர் கதையை சொன்ன பிரதமர்!

modi
நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட போது தமிழகத்தில் உள்ள கோவில் ஒன்றில் சிவபெருமானே செஸ் விளையாடியதாக நமக்கே தெரியாத புராணக்கதை ஒன்று தெரிவித்துள்ளார்
 
நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி தமிழகம் செஸ் விளையாட்டு போட்டியில் முன்னோடியாக இருக்கிறது என்றும் இங்கே சிவனே செஸ் விளையாடி உள்ளார் என்று பேசியுள்ளார் 
 
விளையாட்டு நம் கலாச்சாரத்தில் தெய்வீகமாக பாவிக்கப்பட்டது என்றும் தமிழ்நாட்டில் சதுரங்க வல்லபநாதர் என்ற ஒரு கோயில் உண்டு என்றும் திருப்பூவனூர் நகரில் உள்ள இந்த கோவிலுக்கு சதுரங்க ஆட்டத்தில் தொடர்புடைய சுவாரசியமான கதை உண்டு என்றும் அவர் தெரிவித்தார்
 
கடவுள் எங்கே இளவரசியுடன் சதுரங்கம் விளையாடி இருக்கிறார் என்றும் இயற்கையாகவே தமிழ்நாட்டில் ஒரு நகரம்செஸ் விளையாட்டுடன்தொடர்பு உண்டு என்றும் அவர் தெரிவித்தார் 
 
திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருப்பூவனூர் என்ற பகுதியை ஆண்ட அரசனின் மகள் உடன் சிவபெருமான் சென்ஸ் விளையாடினார் என்பதும் அந்த போட்டியில் சிவபெருமான் வெற்றிபெற்று அந்த இளவரசியை மணந்து கொண்டார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. பலருக்கு தெரியாத இந்த புராணத்தை பிரதமர் மோடி நேற்று வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது