திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 ஜூலை 2022 (20:52 IST)

இந்திய அணிக்கு கருப்பு நிற காய்: பிரதமர் மோடி தேர்வு

Modi
இந்திய அணிக்கு கருப்பு நிற காயை தேர்வு செய்தார் பிரதமர் மோடி! இதன்மூலம் இந்திய அணி கருப்பு நிற காயை இந்த ஒலிம்பியாட்டில் பயன்படுத்தும்!
 
மேலும் பிரதமர் தனது உரையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை குறுகிய காலத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது என்று பாராட்டு தெரிவித்தார்.
 
மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை மிகவும் குறுகிய காலத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளதால் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி நம் நாட்டுக்கே பெருமை என்றும் பிரதமர் மோடி புகழாரம் செய்தார்.
 
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, ஆளுநர் மாளிகை செல்கிறார். அங்கு அவருக்கு இரவு விருந்து அளிக்கப்படுகிறது; நாளை காலை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொள்கிறார்