திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 ஜூலை 2022 (20:56 IST)

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் படம் இடம்பெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Madurai court
செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் தமிழக முதல்வர் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது என்றும் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெறாதது குறித்து பாஜகவினர் தங்கள் அதிருப்தியை தெரிவித்து இருந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இது குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது
 
இன்றைய விசாரணையின்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரத்தில் குடியரசுத் தலைவர் பிரதமர் படங்கள் இடம்பெற வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பட விளம்பரம் சேதப்படுத்தப்பட்டால் அதில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது