வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2022 (18:19 IST)

செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்தியாவுக்கு முதல் வெற்றி

Chess
செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று தொடக்க விழாவில் நடைபெற்ற நிலையில் இன்று முதல் போட்டிகள் தொடங்கியுள்ளன என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் இன்று நடந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர் ஒருவர் வெற்றி பெற்றதை அடுத்து இந்தியாவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது 
 
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோனக் சத்வானி என்பவர் முதல் சுற்றில் வெற்றி பெற்று உள்ளார். அவர் இந்த தொடரில் இந்திய அணிக்கு விளையாடிய நிலையில் 36 வது நகர்த்தலில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ரகுமான் என்பவரை வெற்றி கொண்டார்.  அதனை அடுத்து இந்தியாவுக்கு முதல் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது