ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 12 ஜனவரி 2023 (17:18 IST)

தைவான் விமானத்தில் மொபைல் சார்ஜர் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு

Taiwan
தைவான் நாட்டில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் சார்ஜர் வெடித்து தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் நாட்டில் டாவோயுவான் என்ற சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது.

இங்கிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் டி.ஆர்.993 விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறிய நிலையில், இந்த விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது.
அப்போது, பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த  பயணி ஒருவரது செல்போன் சார்ஜர் ஒன்று திடீரென்று வெடித்தது.

 இதைப் பார்த்து அருகில் இருந்த பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

விமான பணிப்பெண்கள் இந்தத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  செல்போன் சார்ஜர் வைத்திருந்தவரும், அவர் அருகில் இருந்த 2 பேரும் காயமடைந்துள்ளனர்.

தற்போது, மூன்று பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த அசம்பாவித சம்பவத்திற்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிலையம்  சார்பில் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.