வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (15:03 IST)

ஜனவரி 13 ,14 ஆகிய தேதிகளில் இரவு நேரத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் - மெட்ரோ ரயில் நிர்வாகம்

பொங்கல் பண்டிகையொட்டி  நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு  நேரத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில்  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையொட்டி தமிழகம் முழுவதிலும் இன்று முதல் 14 ஆம் தேதி வரை16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இன்று மட்டும் 2000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில்,   13 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் பொங்கல் பண்டிகையயொட்டி, மக்களுக்காக இரவு நேரத்தில் 12 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகளுக்காக 5 நிமிட இடைவெளியில் 2 நாட்களும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.