திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (16:31 IST)

5 நிமிடத்தில் ஆட்சியே மாறும்!? – விஜய் டயலாக்கை பாஜக ட்ரெண்ட் செய்வது ஏன்?

வாரிசு படத்தில் விஜய் பேசும் வசனத்தை திமுகவிற்கு எதிராக ட்விட்டரில் ஹேஷ்டேகாக பாஜகவினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த சில காலமாக தமிழ்நாடு அரசு – ஆளுனர் ஆர்.என்.ரவி இடையேயான முரண்பாடுகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுனர் உரையை முழுவதுமாக படிக்காமல் சில வார்த்தைகளை நீக்கியதும், அதற்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஆளுனர் பாதியிலேயே சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய நிலையில் ஆளுனரை திமுக நடத்திய விதம் குறித்து பாஜக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தில் விஜய் பேசிய “5 நிமிடத்தில் ஆட்சியே மாறும்” என்ற வசனத்தை ட்விட்டரில் ஹேஷ்டேகாக ட்ரெண்ட் செய்து வரும் பாஜகவினர் திமுகவை விமர்சித்து அதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Edit By Prasanth.K