செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (15:50 IST)

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்: சட்டசபை சம்பவம் குறித்து ஆலோசனையா?

Governor
தமிழக கவர்னர் ரவி நாளை டெல்லி பயணம் செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக சட்டசபை சமீபத்தில் கூடிய போது ஆளுநர் உரையின்போது எம்எல்ஏக்கள் கூச்சல் குழப்பம் விளைவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனை சபாநாயகர் அப்பாவு அவர்கள் கண்டிக்காமல் அமைதியாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் ஆளுநர் அவையில் இருக்கும்போதே அவருக்கு எதிராக முதலமைச்சர் முக ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார். இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் நாளை டெல்லிக்கு கவர்னர் ரவி செல்ல இருப்பதாகவும் அவர் டெல்லியில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. 
 
சட்டசபையில் நடந்த விவகாரம் குறித்து இன்று திமுக எம்பிக்கள் ஜனாதிபதியை சந்தித்துள்ள நிலையில் நாளை கவர்னர் டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran