1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (09:26 IST)

டாஸ்மாக் குறித்து கடுமையான வார்னிங் விட்ட ஸ்டாலின்!

டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 
கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் இன்று முதல் மேலும் சில தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது. இதில் டாஸ்மாக் திறப்பும் அடக்கம். இந்நிலையில் இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது... 
 
பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. டாஸ்மாக் கடைகள் முழுமையாக கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும். 
 
டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும். கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தங்களுக்கும் நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும். காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் என கோரியுள்ளார்.