1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Police file Bocso case against Sivasankar Baba

மாணவி பாலியல் புகார்; சிவசங்கர் பாபா மீது போக்சோ வழக்கு!

Tamilnadu
சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரின் பேரில் அவர்மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக முன்னாள் மாணவி புகார் அளித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணைக்கு முற்பட்டபோது சிவசங்கர் பாபா உத்தர்கண்டில் இருப்பதாகவும் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிவசங்கர் பாபாவுக்கு எதிரான தகவல்களை திரட்டவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் போலீஸாரை பணியமர்த்த வேண்டாம்: டிஜிபி உத்தரவு!