1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin visits and checks ration shops

ரேஷன் கடைகளுக்கு திடீர் விசிட் அடித்த ஸ்டாலின்

ரேஷன்
ஆழ்வார்பேட்டை, நந்தனம், ராயப்பேட்டை  ஆகிய இடங்களில் உள்ள ரேசன் கடைகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

 
கொரோனா தொற்றின் தாக்கம் காரனமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கை தமிழக அரசு அறிவித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களை கவனத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக கடந்த மாதம் 2000 ரூபாயை முதல்வர் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கினார். அதே போன்று இந்த மாதமும் நேற்று முதல் 2000ரூபாய் மற்றும் 14 பொருட்களை ரேசன் கடைகளில் மூலமாக வழங்கி வருகிறார். 
 
இதனையடுத்து தமிழக முதல்வர் அவர்கள் இன்று ஆழ்வார்பேட்டை, நந்தனம், ராயப்பேட்டை  ஆகிய இடங்களில் உள்ள ரேசன் கடைகளில் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய ரேசன் பொருட்களை எந்தவித தடையும் இல்லாமல் தரப்படுகிறதா, பொருட்கள் கையிருப்பு எவ்வாறு உள்ளது, கொரோனா நிதி கொடுப்பதில் ஏதும் பிரச்சினை உள்ளதா? என்று ரேசன் கடையில் ஊழியரிடம் கேட்டுத்தெரிந்து கொண்டார்.
About Writer
Sugapriya Prakash