திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (10:16 IST)

அரியலூரில் ஹைட்ரோகார்பன் கிணறு; ஓஎன்ஜிசி விண்ணப்பம்! Vs முதல்வர் கடிதம்!

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என முதல்வர் கடிதம் எழுதியிருந்த நிலையில் அரியலூரில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிப்பு மற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் அரியலூரில் 10 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க சுற்றுசூழல் அனுமதி கேட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. முதல்வர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கேட்டு தமிழக சுற்றுசூழல் துறையிடம் விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஹைட்ரோகார்பன் எடுக்க மக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.