1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (09:01 IST)

பெற்றோரை இழந்த குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் - துவங்கி வைத்தார் ஸ்டாலின்!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

 
தமிழ்நாட்டில், கொரோனாவால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செலுத்தவும், அவர்களுக்கு18 வயது நிறைவடையும் போது வட்டியுடன் முழு தொகையும் வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் 29ம் தேதி உத்தரவிட்டார். 
 
இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வைப்பு நிதியாக ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார்.