செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (09:17 IST)

நாளை மோடியை சந்திக்கும் ஸ்டாலின்... பயண ப்ளான் என்ன?

தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக நாளை டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறார். 

 
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். 
 
தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக நாளை டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறார். நாளை மாலை 5 மணிக்கு சந்திப்பு நடைபெறுகிறது. இதற்காக தனி விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் செல்ல உள்ளார். 
 
பிரதமர் உடனான சந்திப்புக்கு பின் 18 ஆம் தேதி காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் மு.க.ஸ்டாலின் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதால் அக்கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் டெல்லிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிகிறது.