தொடர்புடைய செய்திகள்
- பிச்சிகிட்டு ஓடும் நிர்வாகிகள்... காலியாகும் தேமுதிக கூடாரம்!!
- ”சாக்லெட்டை காட்டியவுடன் ஏமாற நாங்கள் குழந்தைகள் அல்ல”..ஸ்டாலினை விளாசிய ஜெயக்குமார்
- தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று முளைத்த மழைக்காளான்! அமைச்சர் ஜெயகுமார்
- தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் வேண்டும்!! – மத்தியில் அமைச்சர் கோரிக்கை
- மசூதியெல்லாம் கண்ணுக்கு தெரியாது! விநாயகர் சதுர்த்தி என்றால் பிரச்சினை செய்வார்கள்?? – ட்விட்டரில் புலம்பும் எச்.ராஜா
வெள்ளை அறிக்கை கேட்டேன் வெளிநாடுகளுக்கு போய் விட்டார்கள் – மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த வெள்ளை அறிக்கை கேட்டதற்கு அமைச்சர்கள் வெளிநாடு போய்விட்டார்கள் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
அண்ணா அறிவாலய மேலாளர் மகனின் திருமணம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய ஸ்டாலின் தொண்டர்களிடையே பேசியுள்ளார்.
அப்போது அவர் நாட்டின் பொருளாதார நிலை அதள பாதாளத்துக்கு சென்று கொண்டிருப்பதாகவும், அதை மறைக்கவே மத்திய அரசு காஷ்மீர் விவகாரம் போன்றவற்றை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் நடத்தப்பட்ட முதலீட்டாளர் மாநாடு தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட கேட்டதாகவும், அதை இதுவரை வெளியிடாமல் அமைச்சர்கள் வெளிநாடு பயணங்களில் மூழ்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தற்போது அமெரிக்கா சென்றிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு சில அமைச்சர்கள் சென்றிருக்கின்றனர். திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்தோனேஷியா, தாய்லாந்து நாடுகளுக்கு வனத்துறை சார்பான பணிகளுக்காக சென்றிருக்கின்றனர். அதனால் தற்போது பெரும்பானமையான அமைச்சர்கள் தமிழ்நாட்டில் இல்லை. இதை சிலேடையாக குறிப்பிட்ட ஸ்டாலின் “தமிழக அமைச்சரவை தற்போது சுற்றுலா அமைச்சரவையாக மாறிவிட்டது” என்று கிண்டலடித்திருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
