புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (14:47 IST)

மசூதியெல்லாம் கண்ணுக்கு தெரியாது! விநாயகர் சதுர்த்தி என்றால் பிரச்சினை செய்வார்கள்?? – ட்விட்டரில் புலம்பும் எச்.ராஜா

அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட விடாமல் போலீஸார் பிரச்சினை தருவதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

நேற்று விநாயகர் சதுர்த்தி நாடெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆலயங்களில் சிலைகள் வாங்கி வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. மக்களும் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் திருவுருவங்களை வீடுகளில் வாங்கி வைத்து பூஜை செய்தனர்.

அதேசமயம் கோவில்களுக்கு விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டபோது பல இடங்களில் சில கலவரங்களும் ஏற்பட்டன. இதில் சில ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினரை போலீஸார் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து தனது கண்டனங்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் எச்.ராஜா.

அந்த பதிவில் அவர் “மசூதிகளில் உள்ள கூம்பு ஒலிபெருக்கி உபயோகப் படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தும் மாநிலம் முழுவதும் அது நிறைவேற்றப் படுத்தப்படவில்லை. புழல் சிறையில் எஸ் பி யை பிலால் மாலிக் தாக்குகிறார். ஆனால் இந்துக்கள் அமைதியாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட முடியவில்லை.

இன்று சிவகங்கையில் பாஜக மாவட்ட செயலாளர் எஸ் ஐ ரஞ்சித்தால் தாக்கப்பட்டுள்ளார். மேலும் ஆர் எஸ் எஸ் பொறுப்பாளர் சதீஷ் காவல்துறையினரால் காயப்படுத்தப் பட்டுள்ளார். மாவட்டம் முழுவதும் பிரச்சினை இன்றி நடந்து கொண்டிருக்கையில் சிவகங்கை ஆய்வாளர் மோகன் அவர்களின் தவறான நடவடிக்கைகளே பிரச்சினைக்கு காரணம். சிவகங்கை நகர காவல்துறை யின் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.