1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin take lead in Kolathur

கொளத்தூர்ல ஸ்டாலின்தான் வராரு..! – அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை!

Tamilnadu Election
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் அதிக வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உட்பட சுயெட்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தமாக 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 12,664 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் 5012 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். ஏற்கனவே கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை வெற்றிப்பெற்றுள்ள மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நான்காவது முறையும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பின்னடைவில் இருக்கும் தமிழக பிரபலங்கள் யார் யார்?