1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (11:02 IST)

அதிமுக வேட்பாளர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் க. பாண்டியராஜன் பின்னடைவு

அதிமுக வேட்பாளர்களான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் க. பாண்டியராஜன் பின்னடைவில் உள்ளனர். 

தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பல இடங்களில் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார்.
 
அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் 6,414 வாக்குகளும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளாராவ தங்க தமிழ்ச்செல்வன் (6,538 வாக்குகள்) விட 124 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.
 
அதேபோல் அதிமுக கட்சி சார்பில் ஆவடி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரான க. பாண்டியராஜன் 6,320 வாக்குகளும், திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான சாமு. நாசர் 10,329 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சாமு. நாசரை விட 4,009  வாக்குகள் வித்தியாசத்தில் பின்னிலையில் உள்ளார்.
 
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், திமுக 131 (திமுக 107, காங்கிரஸ் 12, மதிமுக 4, சிபிஎம் 3, சிபிஐ 2, விசிக 2, மற்றவை 2) இடங்களையும், அதிமுக 101 இடங்களையும் (அதிமுக 86, பாஜக 5 பாமக 10), மநீம 1 இடங்களையும் பெற்றுள்ளது.