வெள்ளி, 3 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2026 (21:52 IST)

மோடி ரோட் ஷோ நடத்தினால் திமுகவுக்கு குஷிதான்!. முக ஸ்டாலின் நக்கல்!..

stalin
இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்தாலும் தமிழகத்தில் மட்டும் பாஜகாவால் நுழைய முடியாத நிலை இருக்கிறது. ஏனெனில் தமிழகத்தில் ஓரளவுக்கு படித்தவர்கள் இருப்பதால் அவர்கள் பாஜகவின் கொள்கை என்ன? பாஜகவின் நோக்கம் என்ன? தமிழ்நாட்டுக்கு பாஜக வந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனாலயே அந்த கட்சிக்கு அவர்கள் வாக்களிப்பதில்லை.

ஒருபக்கம் கடந்த 60 வருடங்களுக்கு மேல் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. புதிதாக ஏதேனும் வந்தால் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை மட்டுமே வாங்குகிறார்கள். அதிமுக, திமுகவை போல் அவர்களால் வாக்கு வங்கியை வாங்க முடியவில்லை.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவை தனது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்திருக்கிறது பாஜக. இது அதிமுக தலைமையிலான கூட்டணி என யாரும் சொல்வதில்லை.. பாஜக நபர்கள் எல்லாருமே தேசிய ஜனநாயக கூட்டணி என்றுதான் சொல்கிறார்கள்..

இந்நிலையில் இன்று கோவையில் பிரச்சாரம் செய்த முதல்வர் முக ஸ்டாலின் ‘பெரும்பாலும் வெளிநாடுகளில் வசித்து வரும் நமது பிரதமர் மோடி தேர்தல் நடக்கும்போது மட்டும் தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார்.. ஏப்ரல் 4ம் தேதி சென்னையில் ரோட் ஷோநடத்துவதற்காக பிரதமர் மோடி வருகிறார்.. இதனால் யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ.. எங்களுக்கு மகிழ்ச்சி.. திமுக காரர்களுக்கு செம குஷி..

2024 நாடாளுமன்ற தேர்தலின் போது சென்னையில் மோடி ரோட் ஷோ நடத்தினார். நமக்கு 40க்கு 40 கிடைத்தது.. இப்போது அடித்து சொல்கிறேன்.. அவர் வந்தால் நாம் 200 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடுவோம்.. மோடியும், அமித்ஷாவும் எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வருகிறார்களோ நம்முடைய வெற்றியின் மார்ஜின் கூடிக் கொண்டே போகும்’ என நக்கலாக பேசியிருக்கிறார் ஸ்டாலின்.