தொடர்புடைய செய்திகள்
- உள்ளாட்சித் தேர்தலில் தள்ளுமுள்ளு- மன்னிப்புக் கேட்ட நடிகர் விஜய்!
- இந்தியா-ஐக்கிய அமீரகம் இடையே ஒப்பந்தம்: 100 பில்லியன் டாலருக்கு வர்த்தகம்
- 42.21 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- மே.தீவுகளுக்கு எதிரான டி-20 தொடரையும் வென்றது இந்திய அணி
- #ArabicKuthu பாடல் உலகளவில் புதிய சாதனை....ரசிகர்கள் கொண்டாட்டம்
22 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 22,270 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,28,06,155 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 325 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,11,230 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,20,37,536 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,53,739 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
