திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (08:42 IST)

ரேபிட் கருவிக்கு அதிக விலை கொடுத்தது ஏன்? – மு.க.ஸ்டாலின் கேள்வி

ரேபிட் கிட் கருவிகள் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிய வந்ததையடுத்து நீதிமன்றமே விலை நிர்ணயித்து அறிவித்துள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா பரிசோதனைகளுக்காக மத்திய அரசு சீனாவிடமிருந்து இடைத்தரகு நிறுவனம் ஒன்றின் மூலமாக ரேபிட் கருவிகளை வாங்கியது. அதே சமயம் தமிழகம் வேறொரு நிறுவனத்தின் மூலம் ரேபிட் கிட்களை வாங்கியது. இரு நிறுவனங்களுமே சீனாவிடமிருந்து ரூ.245 க்கு ரேபி கருவிகளை வாங்கி ரூ.600க்கு விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து ரேபிட் கருவிகளை ரூ.400க்கு விற்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”குறைந்த விலையே உள்ள ரேபிட் கருவிக்கு தமிழக அரசு அதிக விலை கொடுத்தது ஏன்? மத்திய அரசின் அங்கீகாரமற்ற ஒரு தரகு நிறுவனத்தின் மூலம் ரேபிட் கருவிகளை வாங்கியது ஏன்?” உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும் இந்த கேள்விகளுக்கு அரசியல் என்று சொல்லி கடந்து போகாமல் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.