தொடர்புடைய செய்திகள்
- நாளை சமூக நீதி நாள்! கலைஞர் சிலை முன்பு உறுதியேற்கும் முதல்வர்!
- பள்ளிகள் திறப்பது குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் எடுப்பார் - அன்பில் மகேஷ்!
- கோவில்களில் மூன்று வேளையும் அன்னதானம்! – தொடங்கி வைத்தார் முதல்வர்!
- சமூகநீதியை கவனிக்க கண்காணிப்பு குழு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
- களத்தில் சந்திப்போம்… வெற்றி நமதே..! – பிரச்சாரத்திற்கு கிளம்பும் கமல்ஹாசன்!
அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
திமுக கொடுத்த 500 தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலின்போது திமுக 500க்கும் அதிகமான வாக்குறுதிகளை அளித்திருந்த நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு வாக்குறுதிகளை அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில் தமிழக அனைத்து துறை செயலாளர்களுக்கும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதில், தேர்தலின்போது அளித்த 500 வாக்குறுதிகளும் அரசாணையாக மாற்றப்பட வேண்டியது அவசியம். வாக்குறுதிகளை நிறைவேற்ற சம்பந்தபட்ட துறை செயலாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு அறிவிப்பையும் காலத்தை நிர்ணயித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
