பள்ளிகள் திறப்பது குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் எடுப்பார் - அன்பில் மகேஷ்!
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்ரறை ஆண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த சூழலில் கடந்த 1ம் தேதி முதலாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதையடுத்து 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது மற்றும் கொரோனா பாதிப்பு தொடர்பாக முதலமைச்சரிடம் அறிக்கை சமர்பித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். அது குறித்து கூறிய அவர், பள்ளிகள் திறப்பது தொடர்பான இறுதி முடிவை முதலமைச்சர் எடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.