1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin opposes Farm Act

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் - ஸ்டாலின்!

Farmers Protest
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 6 மாதத்தை நிறைவு செய்துள்ளது. இருப்பினும் இதனை மத்திய அரசு பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.
 
இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் நலனுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். 
 
விவசாயிகள் தங்கள் போராட்டங்களை துவங்கி இன்றுடன் 6 மாதங்கள் ஆகிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மதித்து வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசு முன்வரவில்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
லட்சத்தீவு அதிகாரியை திரும்ப பெறவேண்டும்… அதிகரிக்கும் எதிர்ப்பு!