திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 24 மே 2021 (19:26 IST)

ரேஷன் கடைகள் நாளை முதல் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகள் அற்ற கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக காய்கறி கடைகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்கும் கடைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ரேஷன் கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். இதனை கணக்கில் கொண்டு சற்று முன் தமிழக அரசு ரேஷன் கடைகளை திறப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது 
 
இதன்படி ரேஷன் கடைகள் நாளை முதல் செயல்படும் என்றும் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாளை முதல் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை தனிமனித இடைவெளியை கடைபிடித்து வாங்கிக் கொள்ளவும் என தமிழக அரசு அறிவித்துள்ளது