திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 24 மே 2021 (09:11 IST)

106 வகையான காய்கறி, பழங்கள் - மக்கள் பயன்பாட்டிற்கு வாகனங்களில் சேவை!

வாகனங்கள் மூலம் உழவர் சந்தை விலைக்கு 106 வகையான காய்கறி, பழங்கள் விற்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி. 

 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் காய்கறிகள் பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்கும் கடைகள் திறக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு காய்கறிகளையும் மளிகை பொருட்களையும் வாங்கி குவித்தனர். 
 
இந்நிலையில் காய்கறிகள் பழங்கள் தோட்டக்கலைத்துறை மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்றும் மொத்தமாக வாங்கி வைக்கத் தேவையில்லை என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை 7 மணி முதலே சென்னையில் பல இடங்களில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இது குறித்து தெரிவிக்கையில், வாகனங்கள் மூலம் உழவர் சந்தை விலைக்கு 106 வகையான காய்கறி, பழங்கள் விற்கப்படும். தனியாரும் விரும்பினால் வாகனங்களில் காய்கறிகள் விற்க அனுமதி தரப்படும் என தெரிவித்துள்ளார்.