செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2019 (08:16 IST)

முக ஸ்டாலின் அதுக்கெல்லாம் சரிப்பட மாட்டார்: அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும், அதன் கூட்டணி கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.,

இந்த நிலையில் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ, நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி என்ற பகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

திமுக தலைவர் ஸ்டாலின், வாரிசு அரசியலை கட்சியில் திணித்து வருகிறார். தமிழக முதல்வராக வேண்டும் என மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். ஆனால் அந்தப் பதவிக்கு அவர் சரிப்பட மாட்டார். மு.க.ஸ்டாலின் மக்கள் முன் நடித்து வருகிறார். அவரது நடிப்பு இனிமேல் எடுபடாது. நாங்குநேரி இடைத் தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே காணமல் காணாமல் போய்விட்டது. எனவே அதிமுக மட்டுமே தேர்தல் களத்தில் உள்ளதால் அதன் வெற்றி உறுதியாகிவிட்டது’ என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.