1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2019 (13:00 IST)

காசு கேட்ட தினகரன்; கொடுக்க மறுத்த சசிகலா: இது என்னங்கடா புதுசா??

டிடிவி தினகரன் தேர்தலில் போட்டியிட சசிகலாவிடம் பணம் கேட்டதாகவும், சசிகலா பணம் கொடுக்க மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. 

 
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அடுத்த மாதம் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்திருந்தது. 
 
தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ளது. திமுக மற்றும் அதிமுகவிற்கு எதிராக நாம் தமிழ்ர கட்சியும் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளது. 
இந்நிலையில் தினகரன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன் என ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியின் உண்மைதன்மை தெரியாத நிலையில், அந்த செய்தி குறிப்பிடுவது பின்வருமாறு, சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பில் இடைத்தேர்தலில் போட்டியிட பணம் கேட்டதாவும் கூறப்பட்டுள்ளது. 
 
ஆனால், சசிகலா கோபத்துடன் தன்னிடம் பணம் இல்லை எனவும் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் எனவும் கூறியதாகவும் இதானலேயே டிடிவி தினகரன் சின்னத்தை காரணம் காட்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால், தினகரன் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு சின்னம் வழங்கப்படுவதால் கட்சியை மக்களிடையே கொண்டு சேர்ப்பதிலும், வெற்றி பெறுவதிலும் சிரமங்கள் ஏற்படுவதால், மாநில கட்சிகளை போலவே நிலையான சின்னம் பெற்ற பிறகே போட்டியிடுவது என அமமுக முடிவெடுத்துள்ளதாக கூறினார். 
 
இதை தவிர்த்து மற்றொரு பக்கம் கட்சிக்குள் நடந்துவரும் உள்பூசல்களை சரிசெய்யாமல் தேர்தலுக்கு செல்வது சரியாக இருக்காது என்பதாலேயே தினகரன் தற்காலிகமாக பின்வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.