செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ் கியான்
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2019 (17:14 IST)

திமுக தோற்கணும் ! அதிமுக வெற்றிக்கு பாஜக கியாரண்டி... பொன். ராதாகிருஷ்ணன் உறுதி !

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் நவம்பர் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் ஆதரவை கோருவதற்காக அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பாஜக அலுவலகத்துக்கு சென்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வரவுள்ள இடத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக பாஜக உறுதியளித்துள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜகவினர் ஆதரவு தெரிவிக்குமாறு, சமீபத்தில், சென்னைக்கு வருகை தந்த மோடியிடம் முதல்வர் எடப்பாடி கோரிக்கை வைத்தார்.
 
இந்நிலையில், தற்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பாஜக அலுவலகத்திற்கு சென்று பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க கோரியும், பாஜக தலைவர்கள் அதிமுகவிற்காக பரப்புரை செய்ய கோரியும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக, பெரும் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது :
 
இரு கட்சிகளிடையே எந்த கருத்து வேறுபாடுகளும் கிடையாது.. இன்று. அமைச்சர் ஜெயக்குமாருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. இதையடுத்து இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக முடிவு எடுத்துள்ளோம். 
நாங்குநேரில், விக்கிரவாண்டியில் திமுக கட்டாயமாகத் தோற்க வேண்டும். அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யும் வகையில் பாஜகவினர் தீவிரமாகச் செயல்படுவர்
 
இடைத்தேர்தலில் பரப்புரைக்கு செல்வது குறித்து தலைமை முடுவு செய்யும். மாநில பாஜக தலைவர் இல்லாததால் அகில் இந்திய தலைமையிடம் தான் பேச முடியும் என்று தெரிவித்தார்.
 
மேலும், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி நிலைப்பாடு பற்றி பின்னர் தெரிவிக்கப்பட்டும் எனத்  தெரிவித்தார். 
 
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர், கோவையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பேசிய பாஜக மூத்த தலைவர், சி.பி. ராதாகிருஷ்ணன், திமுக தலைவர் ஸ்டாலினை ‘எங்களை வீழ்த்திவிட்டு வெற்றித் தளபதியாக இருக்கிறார் ’என்று புகழ்ந்தார். இது பாஜக தலைமையிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
அதன்பின்னர் திமுக - பாஜக கூட்டணி உருவாகுமா என கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இதற்கிடையே  ஒரே நாடு, ஒரே மொழி என்ற தனது கருத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவு செய்ததையடுத்து தமிழகத்தில் ஸ்டாலின் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். இதற்கிடையே தமிழக ஆளுநர் ஸ்டாலினை அழைத்துப் பேசிய பின்னர் இந்தப் போராட்டத்தை கைவிடுவதாக ஸ்டாலின் அறிவித்தார். திமுக - பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உருவாகுமா என கேள்வி எழுந்தநிலையில், இன்று பொன்.ராதாகிருஷ்ணன், திமுக இடைத்தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார்.
அதனால் மக்களவைத் தேர்தலைப்போலவே, காங்., - திமுக, பாஜக.,- அதிமுக ஆகிய இரு கூட்டணி கட்சிகள் தேர்தலைச் சந்திக்க உள்ளன. இதில் யாருக்கு வெற்றி என்பதை பொருத்திருந்து பார்ப்போம்