1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 3 அக்டோபர் 2019 (18:07 IST)

தேர்தலில் பணத்தை நம்பி யார் போட்டியிடுவர் ? மக்களுக்கு தெரியும் ! - கடம்பூர் ராஜு

அக்டோபர் 21 ஆம் தேதி  விக்கிரவாண்டி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ ராதாமணி மறைவையொட்டி அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. நாங்குநேரி தொகுதியில் வசத்தகுமார் எம்.எல்.ஏ எம்பி ஆனதால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்  அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளன. அதிமுக தரப்பில் ராங்குநேரியில் நாராயணன் ,  விக்கிரவாண்டியில்  முத்தம்மிழ் செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.அதேபோல் திமுக தரப்பில் விக்கிரவாண்டி தொகுகுதியில் புகழேந்தி, நாங்குநேரியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிடவுள்ளனர்.
 
அதேசமயம் மொத்தம் 20 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள்  இந்த தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதுகுறித்து கடம்பூர் ராஜு கூறியுள்ளதாவது : இடைத்தேர்தலில் பணத்தை நம்பி யார் போட்டியிடுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். 
 
மேலும்,டெங்கு பாதிப்பு மிககுறைவு என்ற நிலையை தமிழகம் பெற்றுள்ளது மழைக்காலம் என்றாலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த எந்த பாதிப்பும் ஏற்படாது என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
 
அமைச்சர் கடம்பூர் ராஜூ, இடைத்தேர்தலில் பணத்தை நம்பி யார் போட்டியிடுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்  என்று கூறியுள்ளது..திமுகவைத்தான் ஜாடை மாடையாக பேசியுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துவருகின்றனர்.