தொடர்புடைய செய்திகள்
- இப்போ எடுக்குறேன் சூனியத்த.. ஊரை ஏமாற்றி பங்களா கட்டிய கும்பல்! – சென்னையில் பரபரப்பு!
- மன்மோகன்சிங் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
- 505 வாக்குறுதிகளில் இதுவரை 202 செஞ்சாச்சு... மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
- வடகிழக்கு பருவ மழை: முன்னெச்சரிக்கை குறித்து முதலமைச்சர் ஆலோசனை;
- டாஸ்மாக்கில் ஸ்டாலின் படம் இல்லை - உ.பி.யின் ரகளை
நீ கவலைப்படாதம்மா.. நான் பாத்துக்கறேன்..! – சிறுமிக்கு ஆறுதல் சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சேலத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்துள்ள சிறுமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் போன் செய்து ஆறுதல் கூறியுள்ளார்.
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமாரின் மகள் ஜனனி. பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்த ஜனனி கடந்த 2019ம் ஆண்டு திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரகம் இரண்டும் செயலிழந்ததும் மாற்று சிகிச்சை செய்ய வேண்டியதும் தெரிய வந்துள்ளது.
பல நாளாக சிறுமி ஜனனிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தனது குழந்தையை காப்பாற்ற வேண்டி ஜனனியின் தயார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுமிக்கு சிகிச்சை செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளதுடன், சிறுமியின் தாயாருக்கும், சிறுமிக்கும் செல்போனில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
