1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (08:52 IST)

வடகிழக்கு பருவ மழை: முன்னெச்சரிக்கை குறித்து முதலமைச்சர் ஆலோசனை;

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதை அடுத்து குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்
 
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர், நவம்பர், டிசம்பரில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்பதும் இந்த  மழையின் போது புயல் மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது
 
அந்த வகையில் வட கிழக்கு பருவ மழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் தமிழக அமைச்சர்கள், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அனைத்து துறை சார்ந்தவர்களும் பங்கேற்க உள்ளதாகவும் மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் போது என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து இன்று ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன