திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (15:01 IST)

மன்மோகன்சிங் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் 
 
முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் இன்று டெல்லியில் தனது இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
 
லட்சக்கணக்கான கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டு எடுத்தது மற்றும் பொருளாதார மந்தநிலை காலங்களில் நீங்கள் இந்த நாட்டிற்கு பொருட்கள் சேவைகள் அனைத்தும் யாராலும் மறக்க முடியாது என்று மன்மோகன் சிங் அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.