புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (11:08 IST)

மனசாட்சியே இல்லைல.. போலி நோட்டை கொடுத்து முதியவரை ஏமாற்றிய நபர்!

கோபி அருகே போலி பணத்தை கொடுத்து மருந்து வாங்க சென்ற முதியவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான சித்தன். 72 வயது முதியவரான இவர் தனது மகளின் பராமரிப்பில் வாழ்ந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் மருந்து கடைக்கு மருந்து வாங்க சென்றுள்ளார்.

அப்போது அந்த பக்கம் வந்த நபர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளார். நல்ல உள்ளம் கொண்டவரான சித்தன் தன்னிடம் இருந்த சில்லறை பணத்தை கொடுத்து விட்டு அவரிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு மருந்தகம் சென்றுள்ளார்.

மருந்தகம் சென்ற பின்னர்தான் தெரிந்துள்ளது அது குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பணம் என்று. மருந்து வாங்க சென்ற முதியவரிடம் இப்படி மனசாட்சியே இல்லாமல் ஏமாற்றிய நபர் குறித்து பலரும் வருந்தி கொண்டுள்ளனர்.