1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (15:01 IST)

டாஸ்மாக்கில் ஸ்டாலின் படம் இல்லை - உ.பி.யின் ரகளை

தென்காசியில் டாஸ்மாக் கடையில் முக ஸ்டாலின் படம் ஏன் இல்லை என சண்டை போட்ட திமுகவினர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளரார் ரவிசங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டை நகர் பகுதியில் அமைந்துள்ள மதுபான கடைக்கு சென்றுள்ளார். அங்கு கடையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்களை அகற்ற கூறி வாக்கு வாதம் செய்துள்ளார்.
 
அதோடு அந்த புகைப்படங்களை எடுத்துவிட்டு தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் படத்தை வைக்கக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து திமுக தலைமை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.